Sunday, May 22, 2011

மற்றவை - 6

                  ***என்று இந்த நிலை மாறும்?***




vijay TV கோபிநாத்-ன் நீயா?நானா?-விற்கு ரசிகன் நான்.அருமையாக நிகழ்ச்சியை வழி நடத்துபவர். நேற்று ஒளிபரப்பிய நிகழ்ச்சியையும் பார்த்தேன். "அப்பாக்களை இழந்த அம்மாக்களும் அவர்களின் பிள்ளைகளும்" என்ற தலைப்பில் பேசினார்கள். வந்திருந்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி கஷ்டப் பட்டு வளர்த்தனர்  என்பதை நிறைய வலிகளுடன் சொல்லினர்.

அதைப் பார்த்த, கேட்ட அவர்களின் பிள்ளைகள் முகத்தில் அப்படி ஒரு கலக்கம். மேலும் அத்தகைய தாய்களுக்கு இந்த சமூகத்தில் உள்ள சில ஆண்களால் பாலியில் ரீதியான கொடுமைகள் நிறைய நடப்பதையும் அந்த பிள்ளைகளே சொன்ன விசயம் மனதை நிறைய வலிக்கச் செய்தது.

நான் ஒன்று மட்டும் அப்படி பட்ட ஆண்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்..
"உங்களுக்கு அரிப்பெடுத்தால் ஒரு விலை மகளை தேடுங்கள்.இப்படிப் பட்ட தாய்களின் மனதை நோகச்செய்யாதீர்கள். அவர்களின் சாபம் நிச்சயம் பலிக்கும்".

கோபி நாத் சொன்னது போல, இன்றளவிலும் நாம் " பெண்கள் நாட்டின்
கண்கள் " , "பெண்ணியத்தை மதிக்கிறோம்", என்று பொய் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். அதுதான் அப்பட்டமான உண்மை. என்று மாறும் இந்த நிலை? விடை தெரிய வில்லை?.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை இழந்த்தவர்களுக்காக பதிவுடன்
வீடியோவையும் இணைத்துள்ளேன். மறக்காமல் பார்க்கவும்.


டிஸ்கி:

"மனைவியை இழந்து இன்னமும் தன் பிள்ளைகளுக்காக வாழும் அப்பாக்களும், அவர்களின் பிள்ளைகளும்" என்ற தலைப்பிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்க கோபிநாத். புண்ணியமாப் போகும்.



முழுவதும் பார்க்க இந்த Link-யை க்கிளிக்கவும்.





***********************************************************

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...