Saturday, May 28, 2011

மற்றவை

               ****கக்ல் Collections*****

த்தனையோ English films இத்தனை வருடங்களில் பார்த்தாகி விட்டது. அதில் சில பல Musical , Dance சம்பந்தமான படங்களும் அடங்கும்.

அதில் நான் மிகவும் ரசித்த Musical மற்றும் dance films , " Shall We Dance "
"The Lizzie McGuire" மற்றும் " Step Up 1 ".

இந்த படங்கள் ரசித்த அளவிற்கு சமீபத்திய ஆங்கில படங்களை  ரசிக்க முடியவில்லை.

1. என்னை மிகவும் கவர்ந்த நடனம்+காதல் இரண்டும் கலந்த ஆங்கில படம் 

                             "Shall We Dance?"



Richard Gere, Jennifer Lopez நடித்த படம். நடிப்பு, நடனம், இசை அனைத்தும்
அவ்வளவு அருமை. அதில் வரும் ஒரு காட்சியின் வீடியோ இது.

காட்சியின் முன்னுரை:

ஹீரோ நடனம் கற்கும் ஆவல் உள்ள நடுத்தர வயதுடையவர். ஹீரோயின் நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை. ஒரு இனிய இரவு நேரத்தில் ஹீரோயின், ஹீரோவிற்கு நடனம் கற்றுக்கொடுக்கும் காட்சி இது.

இசையும்...அதனையொத்த நடனமும் வெகு அருமை.

நீங்களும் பாருங்க.

                    

 இந்தப் படத்தில் எனக்கு பிடித்த பாடல் இது


                    


2. என்னைக் கவர்ந்த இன்னொரு இசை+நடன சம்பந்தமான படம் "Step up"

அந்த படத்தில் வரும் ஒரு காட்சிதான் இது.

காட்சியின் முன்னுரை:

ஹீரோ சந்தர்ப்ப வசத்தால் நடனப் பள்ளியில்  House keeping வேலை செய்யும் இளைஞன். ஹீரோயின் நடனப் போட்டியில் வெற்றி பெற ஆர்வத்துடன்
இருக்கும் நடனப் பள்ளி மாணவி. ஒரு கட்டத்தில் ஹீரோயின்-யின் Dance Companion விலக விட, அவள் ஹீரோவிற்கு நடனம் கற்றுக் கொடுத்து
போட்டியில் வெற்றி பெற முயலுகிறாள்.


                     


இந்த  படத்தின் Climax -ல் வரும் காட்சி இது.

                     



3. Hillary Duff -ஐ "The Lizzie McGuire" என்ற படத்தை பார்த்தது முதல் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஸோ க்யூட்...!

                 


காட்சியின் முன்னுரை:

ஹீரோயின், மேடை என்றாலே பயப்படுபவள். மேடையில் நின்றாலே வெடவெடத்து, வார்த்தைகள் உளறி எல்லோரின் திட்டுக்களை வாங்குபவள்.
அப்படிப் பட்ட அவள் கடைசியில் ஒரு பெரிய பாடகியாக மாறி விடுகிறாள். படத்தின் climax-ல் வரும் இந்த காட்சியில் பாட்டு பாட ஸ்கிரிப்ட் இல்லாமல் தவித்து, கடைசியில் தனது அனுபவத்தையும், தன் மன எண்ணங்களையும் பாட்டாக பாடி அனைவரின் கைதட்டல் பெறுகிறாள். காட்சியைப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.


                  


விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் போட்டியில் கலக்கி அனைவரின் பாராட்டைப் பெற்ற அல்கா அஜித் என்ற 14 வயது சின்னப் பெண்ணின் முதல் திரைப்பட பாடல், The Train என்ற மலையாளப் படத்திற்கு சமீபத்தில் பாடியது. வீடியோவைப் பாருங்க. ( என்ன வாய்ஸ்டா இது...! ) Amazing...!


                 

இந்த பாடலை (mp3) download செய்ய இந்த லிங்க்-ஐ க்ளிக்கவும்.
http://www.musiqbuzz.com/malayalam/movie/the-train/songs-download/chirakengu/

அல்கா அஜித்-க்கு வெற்றியைத் தேடித் தந்த பாட்டு இது.


                


யப்பாடா...! ஒரு வழியா பதிவு எழுதி முடிச்சுட்டேன்..
எப்படி இருந்துச்சு என்னோட இன்றைய பதிவு?.

***********************************************************

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம் அண்ணனுக்கு இசை, நடனத்துல செம ஆர்வம் போல..

Thenammai Lakshmanan said...

FAST FORWARD AND TAKE THE LEAD பார்த்திருக்கீங்களா குணா.. அதுவும் நல்லா இருக்கும்..

sarujan said...

வர்ணனை தொகுப்பு அருமை வாழ்த்துகள்

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...