Friday, May 20, 2011

தெரிஞ்சுக்கோங்க-ELegs

         ***இனி என்னாலும் முடியும்..!***

லகம் முழுவதும் சுமார் 68 மில்லியன் (உலக மக்கள் தொகையில் 1%) மக்கள் சாதாரண மனிதனை போல நடக்க இயலாமல் இருக்கின்றனர். அவர்களில் 20, 30, 40 மற்றும் அதற்கு மேல் வயதையொத்தவரும் அடங்குவர். அவர்களில் விபத்துக்களாலோ அல்லது ஸ்பைனல் கார்ட்(Spinal Card) பாதிப்பிலோ தங்களின் நடையை இழந்தவர்கள் நிறைய உண்டு. உலகம் முழுவதும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை Wheel Chair - ல் தான் கழிக்கின்றனர். இளம் வயதில் wheel chair-ல் வாழ்க்கையை கழிப்பவர்கள் நிச்சயம் பரிதாபத்திற்கு உரியவர்கள்,  தங்கள் முன்னால் மக்கள் சாலையில் நடந்து செல்லும் போது, நம்மாலும் இப்படி நடக்க முடியாதா? என்ற ஏக்கம் நிச்சயம் மனதை வாட்டும். அவர்களின் ஏக்கத்தை ஒருத்தர் தீர்த்து விட்டார். அவர்தான் திரு. Eythor Bender என்பவர்.

அவர் Latest Bio Technology-யின் துணையுடன் , Elegs என்ற பெயரில் ஒரு நவீன உபகரணத்தை கண்டுபிடித்துள்ளார். தற்போது அதன் விலை மிக மிக அதிகம்($100000). சாதாரண மக்கள் வாங்க முடியாது. 10 வருடங்களுக்குள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் மிக எளிமையாகவும், விலை குறைவாகவும் தயாரிப்பேன் என்று உறுதி கூறியிருக்கிறார்.

அதனைப் பற்றிய ஒரு வீடியோ இங்கு வெளியிட்டுள்ளேன். இந்த வீடியொவில் உள்ள அமண்டா (Amanda) என்ற 24 வயதுடைய இளம் பெண் தனது 19 வயதில்
ஸ்கை (ski game, அதாங்க James bond in- World is not enough படத்துல கூட வருமே) விளையாட்டில் எதிர்பாராத ஒரு நொடியில் கீழே விழுந்ததில் ஸ்பைனல் கார்டில் பாதிப்பு வந்தது. மருத்துவர்கள் அவரிடம் சொன்ன வார்த்தைகள்,

" உன்னால் இனி நடன மாட முடியாது (You not able to dance again).."

" உன்னால் இனி உனக்கு பிடித்த விளையாட்டை விளையாட
  முடியாது...(You not able play your's favorite game again)".
 
" உன்னால் இனி குதிக்க முடியாது...(You not able to jump again)"
.

இனி தன் வாழ்க்கை Wheel chair- ல் தான் என்று வருந்திய அமண்டா இப்போது சொல்லும் வார்த்தைகள்,

"என்னால் இனி நடக்க முடியும் உங்களைப் போல...!"

"என்னாலும் இனி விளையாட முடியும்...!"


இத்தனை மகிழ்வான, தன்னம்பிக்கையான வார்த்தைக்கு காரணமான Eythor Bender அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

       


உங்க ஆரோக்கியத்திற்கு (அதாங்க சிரிப்பு நல்ல மருந்தாச்சே..!) இத பாருங்க...ஏதோ என்னால முடிஞ்சது...
   
       
 

**********************************************************


5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மிஸ்டர் பீன் ஹா ஹா ஹா சூப்பர்...

பிரபாஷ்கரன் said...

நீங்க என்ன விஜயகாந்தா புளிவிவரத்தோட சொல்றீங்க ரசித்தேன் தொடரட்டும் இது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்கள் கட்டுரை எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது! மிஸ்டர் பீனின் காமெடி அருமை! வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

தெரிஞ்சுக்கோங்க-E Legs//

தலைப்பே ஒரு மிரட்டலுடன் இருக்கே. இருங்க உள்ளே இறங்கிப் பார்ப்பம்

நிரூபன் said...

ஊனமுற்றோருக்கு நம்பிக்கைக்குச் சான்றாக. இலத்திரனியல் பாதங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை சகோ.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...