Sunday, May 29, 2011

தெரிஞ்சுக்கோங்க - RISUG


ம்ப்யூட்டர் பற்றி தெரிஞ்சவங்களுக்கு நிச்சயம் பில்கேட்ஸ் பற்றியும் கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும். உலகின் முதல் பணக்காரராக நீண்ட வருடங்கள் கோலேச்சியவர். அவர் தனது மனைவி மெலிண்டாவுடன் இணைந்து, "Bill & Melinda Gates Foundation" என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.


அதன் மூலம் வெவ்வேறு துறைகளில் நிகழ்கால மற்றும் எதிர்கால உலகிற்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சி நடத்தும் வல்லுநர்களுக்கு, அவர்களின் ஆராய்ச்சியை ஆராய்ந்து, பாராட்டும் , வெகுமதியும் ( $1 இலட்சம் டாலர் ) கொடுத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, 16 நாடுகளைச் சேர்ந்த 67 வல்லுநர்களுக்கு, அவர்களின் ஆராய்ச்சியைப் பாராட்டி, பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் தலா $1 இலட்சம் டாலர் பரிசு வழங்கிருக்கிறது. அதில் நம் இந்திய திருநாடும் ஒன்று.

மக்கள் தொகைப்பெருக்கம் இன்று நாடுகளுக்கு பெரும் சவாலான ஒன்று. அதனைக் கட்டுப் படுத்தும் முறைகளில், ஒரு சிறப்பான கண்டுபிடிப்பை இரண்டு இந்திய குடிமகன்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். அதற்குத் தான் அந்த பரிசு கிடைத்திருக்கிறது.

திரு. Sujoy K. Guha ( professor of biomedical engineering at the IIT-Kharagpur ) மற்றும் திரு. Abi Santhosh Aprem  ( HLL Lifecare Limited )  என்ற இரண்டு வல்லுநர்கள் தான், அந்த கண்டு பிடிப்பாளர்கள். இதில் திரு. Sujoy K. Guha -க்கு வயது 71 . (சாதனைக்கு வயது தடையே இல்லீங்க..!).



திரு. Sujoy K. Guha -ன் சாதனை:

இவர் கண்டுபிடிப்பின் பெயர்தான் RISUG ( “Reversible Inhibition of Sperm Under Guidance”).

RISUG-ஐப் பற்றி பார்க்கும் முன்பு சில விசயங்களைப் பார்க்கலாம்.

முதலில், நடைமுறையில் இருக்கும் கருத்தடை முறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஆண்களுக்கு - வாசக்டமி, காண்டம் பயன்படுத்துதல், கருத்தடை மாத்திரைகள்
பெண்களுக்கு - காப்பர்-டி, காண்டம் பயன்படுத்துதல், கருத்தடை மாத்திரைகள்

இவற்றில்,

"வாசக்டமி" என்பது அறுவை சிகிச்சை(Operation) மூலம்,  வாஸ் டிஃஃபெரன்ஸ் (Vas deferens) என்னும் ஸ்பெர்ம்ஸ் செல்லும் ட்யூபை(tube) Cut பண்றது. இதன் மூலம் செமனுக்குச்(Semen) செல்லும் உயிர் அணுக்களின் (Sperms) வழியை தடுத்து விடுவது. படத்தைப் பார்க்கவும்.



"காப்பர்-டி" என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பப்பையில் பொருத்திக் கொள்ளும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்ப்பப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து கரு அணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட வேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது.
              
               


'ஐ.யு.சி.டி., 380 ஏ' என்ற புதிய தொழில் நுட்ப முறையில் தற்போது காப்பர்-டி பொருத்தப்படுகிறது.இதில் கையால் தொடாமல், எவ்வித தொற்றும் இல்லாத வகையில், காப்பர் டி பொருத்தப்படுகிறது. இதன் ஆயுள் காலம் பத்துஆண்டுகள்.

பெண்களுக்கு நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளும் முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில் டியூபெக்டமி, லேப்ராஸ்கோபி போன்று பலமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கருத்தடை மாத்திரைகள் ஆபத்தானவை. மருத்துவரின் ஆலோசனை தேவை.

மீதமுள்ள முறையை நான் விளக்க அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

சரி.. விசயத்துக்கு வருவோம்.

Sujoy K. Guha , RISUG  கண்டுபிடிப்பை முதலில் ஆண்களுக்காக உருவாக்கினார்.

ஒரு ஊசியின் மூலம் வாஸல்ஜெல்(Vasaljel) என்னும் ஜெல்லை, வாஸ் டிஃஃபெரன்ஸ் (Vas deferens) என்னும் ஸ்பெர்ம்ஸ் செல்லும் ட்யூபை(tube)-னுள் செலுத்தி, செமனுக்குச்(Semen) செல்லும் உயிர் அணுக்களின் (Sperms) வழியை தடுத்து விடுவது. படத்தைப் பார்க்கவும்.


             


சமீபத்தில் Sujoy K.Guha பெண்களுக்கும் பயன்படும் வகையில் RISUG முறையைக் கண்டு பிடித்திருக்கிறார். ஒரு ஊசியின் மூலம் Styrene Maleic Anhydride (SMA) என்ற ஜெல்லை செலுத்தி கர்ப்பபைக்கு முன் உள்ள ஃபெல்லோப்பியன் குழாயில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி கரு உண்டாவதை தடுத்துக் கொள்ளலாம் என்று தன் சோதனையின் வெற்றி மூலம் உலகிற்கு அறிவித்திருக்கிறார்.

Dimethylsulfoxide (DMSO) என்ற ஜெல்லை ஊசியின் மூலம் செலுத்தி, முன்பு உண்டாக்கிய ஃபெல்லோப்பியன் குழாயில் உள்ள ஜெல் தடுப்பை அழித்து,
கரு இணைப்பை ஏற்படுத்தி குழந்தைப் பேறுக்கு வாய்ப்பை திரும்ப உருவாக்கலாம்.

இந்த முறையைப் பாராட்டித்தான் பில்கேட்ஸ் + மெலிண்டா ஃபவுண்டேஷன் பரிசு கொடுத்திருக்கிறது.

இந்த முறையில் நிறைய சிறப்பம்சங்கள் உண்டு.அவைகள்:

1. கத்தியின்றி, இரத்தமின்றி( அதாங்க அறுவை சிகிச்சை ) கருத்தடைப்பை 
   மேற்கொள்ளலாம்.
2. குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட நினைப்பவர்களுக்கு மிகவும் உகந்தது. 
   குழந்தை வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு ஊசியை மட்டும் 
   செலுத்தினால்  போதும். ஸ்பெர்ம்ஸ்-ன் பாதையை தடுக்கும் ஜெல் அழிந்து
   விடும்.
3. 15 வருடங்களுக்கு இந்த ஜெல் உழைக்கும். (சோதனை மூலம் 
    நிரூபித்திருக்கிறார்கள்).
4. விலை மிகவும் அதிகமில்லை.
5. ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்றது.

இரண்டாவது நபரான திரு. Abi Santhosh Aprem என்பவர், காப்பர்-டி முறையினால் ஏற்படும் விளைவுகளை, தனது கண்டுபிடுப்பின் மூலம் தீர்த்திருக்கிறார்.

காப்பர்-டி முறையில் பயன்படுத்தும் காப்பர் அயன்ஸ்(Copper Ions) மூலம் ஏற்படும் அடி வயிற்றில் வலி, ரத்தப் போக்கு, இதர வலிகளை தனது
காப்பர் அயன்ஸ் கோட்டிங் வித் பைடீகிரேடபல் (Copper Ions Coating with biodegradable polymers ) முறையின் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்.

இந்த கண்டுபிடிப்பை பாராட்டித்தான் பில்கேட்ஸ் + மெலிண்டா ஃபவுண்டேஷன் இவருக்கும் பரிசு கொடுத்திருக்கிறது.


*************************************************************






2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

ம.தி.சுதா said...

மிகவும் விளக்கமாக உரைத்துள்ளீர்கள் மிக்க நன்றீங்க..

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...