Saturday, June 18, 2011

மற்றவை-விமர்சனம்

            ***விமர்சனம்-அவன் இவன்***


முதி கோட்டை என்னும் ஊரில் ஒண்டிக் கட்டை ஜமின்தாராக ஹைனஸ்
( G.M Kumar ) வாழ்ந்து வருகிறார். அவருக்கு வால்டேர் வணங்காமுடி(Vishal),
கும்புடறேன் சாமி ( Arya ) இருவரும் இரு கண்கள் போல. மிகுந்த பாசத்துடன் இருக்கிறார். விஷால் ஒரு ஆண்மையும், பெண்மையும் கலந்த ஒரு கூத்தாடி.
அம்பிகாவின் மகன். ஆர்யா அவருடைய தம்பி. பிரபா ரமேஷ்-ன் மகன். இருவருக்கும் அப்பா ஒருத்தரே ஸ்ரீ காந்த் ( Anand Vaidyanathan ). ஆர்யாவும், விஷாலும் சின்ன சின்ன திருட்டுக்கள் (குலத்தொழிலாம்!) செய்து கொண்டிருக்கிறார்கள். இடையில் ஹைனஸ், ஆர்யா, விஷால் மூவரும் ஊரையே " காமெடி" என்ற பெயரில் அலப்பறை செய்கின்றனர். இடையில் விஷால் ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் பேபி-ஐ (Janani Iyer) டாவடிக்கிறார். ஆர்யா, காலேஜுக்குப் போகும் தேன் மொழி-ஐ (Madu Shalini) டாவடிக்கிறார். பின்பு கள்ளக் கடத்தல் செய்கின்றனர். அப்புறம் மாமிசத்திற்காக மாடுகளை விற்கும் வில்லனை,  ஹைனஸ்-ம் ஆர்யாவும் புளூ கிராஸ் உதவியுடன் போலிஸில் மாட்டி விடுகின்றனர். அந்த பகையில் வில்லன், ஹைனஸை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி கொன்று விடுகிறார். அதற்காக வில்லன் பழி தீர்க்கப் படுகிறார். அது எப்படி என்பதை வெண் திரையில் காண்க.

சேது, பிதாமகன் போன்ற அருமையான படங்களை எடுத்து, திரையுலகின் தனித்துவம் மிக்க இயக்குனராக அவதாரம் எடுத்த பாலாவுக்கு, இந்தப் படம் சறுக்கல்தான்.

சரி. படத்தின் ப்ளஸ்-ஐப் பார்ப்போம்.

ப்ளஸ்:
விஷாலின் நடிப்பு: மனிதர் நிறைய உழைத்திருக்கிறார். ஒன்றரைக் கண் ஆசாமியாக நடித்திருக்கிறார். ஜனனி ஐயரை கரெக்ட் பண்ண , போலிஸ்காரர் தரும் விருந்துக்கு வரும் விஷாலின் கெட்-அப், நடிப்பு சூப்பர். நல்ல காமெடி. அவரின், நவ ரசங்களையும் நடித்துக் காட்டும் ஒரு காட்சி நிச்சயம் பாராட்டப்படும். இப்படி ஒரு கேரக்டரை விஷாலுக்கு கொடுத்து, அவரை மாறுபட்ட நடிகனாக மாற்றிய பாலாவைப் பாராட்டலாம்.


ஜி.எம்.குமாரின் நடிப்பு : ஜமிந்தார் பந்தா பண்ணும் ஆசாமியாக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்பு இவரின் நடிப்பு மிகவும் அருமை. கடைசியில் வில்லனால் நிர்வாணப்படுத்தி, துன்பப்பட்டு, சாகும் போது நன்றாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் அவருக்கும். அவரை இயக்கிய பாலாவுக்கும்.

ஆர்யாவின் நடிப்பு: பிதாமகனில் சூர்யா செய்த கேரக்டரை இதில் ஆர்யா செய்திருக்கிறார். சில இடங்களில் மட்டும் தான் காமெடி ரசிக்கும் படியாக இருக்கிறது.

ஒளிப்பதிவு : ப்ரமாதம். கடைசியில் விஷால், வில்லனை துவம்சம் செய்யும் காட்சி அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

இசை : யுவன் சங்கர் ராசாவின் இசையில் ஒரு பாடல் கேட்கும் படியாக உள்ளது. BGM-ல் மனுஷன் கலக்கி இருக்கிறார். படத்தின் சில இடங்களில் அவரின் பின்ணணி இசை, காட்சியை விட பேசுகிறது.



மைனஸ்:
திரைக்கதை : பிதாமகன் சாயல் அவ்வப்போது தென் படுகிறது. கள்ளக் கடத்தலை செய்த பின் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

பெண் போலிஸ்-திருடன் டாவு நிறைய படங்களில் பார்த்தாகி விட்டது. ஆர்யா-மது சாலினி லவ், பிதாமகன் சூர்யா-லைலாவை ஞாபகப்படுத்துகிறது. நிறைய இடங்களில் நிறைய கேள்விகள் கேட்கலாம். பதில்தான் பாலா சொல்லவில்லை. படத்தில் நிறைய இடங்களில் கெட்ட வார்த்தை பேசப்படுகிறது. அம்பிகா கூட பேசுகிறார்.

விஷால் அரவாணியா? இல்லை ஆண் மகனா? புரியவில்லை.

வில்லனின் அறிமுகம் திடீரென்று நுழைத்தது போல இருக்கிறது. அவரை, புளூ கிராஸ்-யிடம் ஜி.எம்.குமார்+ ஆர்யா மாட்டிவிட்டதால், ஜி.எம்.குமாரை அவர் துன்புறுத்தி, கொல்வது நம்பும்படியாக இல்லை. இன்னும் வேறு சில காரணங்களை காட்டியிருக்கலாம்.

படத்தின் கிளைமாக்சை ஈசியாக யூகித்து விட முடிகிறது. வில்லன், ஜி.எம்.குமார்+ஆர்யா  மோதல், அப்புறம் வரும் ஜி.எம்.குமார்+ஆர்யா+விஷால் பாசப்பிணைப்புக் காட்சிகள் அனைத்தும் நமக்கு முன்பே சொல்லிவிடுகிறது.

இயக்குனர் பாலா சார், அடுத்த முறை நிச்சயம் ஒரு நல்ல படைப்பைத் தரவும்.

                               அவன் -இவன் : பிழைப்பது கஷ்டம்

********************************************************************

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...