Tuesday, July 05, 2011

எ.பி.க - 7

 

ரு பெண் எழுதிய இந்தக் கவிதைகளை நான் எதேச்சையாக படித்த போது , ஆச்சர்யப்பட்டேன்!.. பெண்ணுக்குள்ளும் எத்தனை எத்தனை ரசனைகள்..எத்தனை எத்தனை கற்பனைகள்.. பாராட்டுக்கள் சபீதா...
                                              
                                    * களை இழந்த மாடம் *


பூப் போட்ட பாவடை
பொருத்தமற்ற தாவணி..,

நாலணா பொட்டு
சந்தையில் வாங்கிய
வளையல், தோடு...

படிய வாரிய தலை
வாடிப் போன மல்லிகை
எனினும் தேவதைதான்
ரேவதி அக்கா..,

பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு
களையிழந்துபோனாள்
பட்டுப் புடவையிலும்
பகட்டுச் சிரிப்பிலும்!

---------------------------------------------------------------------------------

                                            * கனவுப் பயணம் *

ஆறு வயது மகளின்
கனவுக்குள் பிரவேசிக்க
நேரிட்டது ஒரு நாள்

பட்டாம்பூச்சி மீது பயணம்
சித்திரக்குள்ளன் ஸ்நேகம்
சாக்லேட் வீடு
ஐஸ்க்ரீம் சாலை

கனவிலிருந்து வெளியேற
வழி தேடினேன்
இல்லாமல் இருந்தால்
நல்லது!

 
நன்றி - சபீதா இப்ராகிம்.

*******************************************************

10 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

இரண்டு கவிதைகளும் அற்புதம்..

அதவும் ரேவதி அக்காவின் வாழ்க்கை யதார்த்தம்
நெஞ்சை நெஞ்சை நெகிழச் செய்தது..

கனவு காணுங்கள் கனவு காணுங்கள்
என்று இதனால்தான் அப்துல் கலாம் சொன்னாரே ?

அருமை.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

இராஜராஜேஸ்வரி said...

இருகவிதைகளும் மனம் கொள்ளைகொண்டன. பாராட்டுக்கள் பகிர்வுக்கு.

கவி அழகன் said...

நெருடலான கவிதைகள்

மகேந்திரன் said...

நெஞ்சை அள்ளும் கவிதைகள்
எதார்த்தம் இங்கே பளிச்சிடுகிறது

தொகுப்புக்கு நன்றி நண்பரே.

பெண்களில் பலர் அருமையாக கவிதைகள்
எழுதுகிறார்கள்.
எனக்குப் பிடித்த கவிதாயினிகளில்
கவிதாயினி சல்மா ....
கவிதாயினி தாமரை ........
இன்னும் பலர்

அன்பன்
மகேந்திரன்

Unknown said...

நிதர்சன கவிதை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு
களையிழந்துபோனாள்
பட்டுப் புடவையிலும்
பகட்டுச் சிரிப்பிலும்!///////

இது போன்று தான் பணத்திற்குள்
பாழ்ப்பட்டு போகிறார்கள் சில தேவதைகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான சிந்தனை..
அழகிய வார்ப்புகள்...

சபீதா இப்ராகிம்ம் அவர்களின் சிந்தனை அழகு...

vidivelli said...

alakiya kavithai..
unkal rasanaikku vaalththukkal...

சமுத்ரா said...

இரண்டு கவிதைகளும் அற்புதம்..

ஹேமா said...

இரண்டு கவிதைகளுமே உணர்வோடு எழுதப்பட்டிருக்கின்றன !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...