Thursday, February 16, 2012

மற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்

குறும்படம் 1:
நான் பார்த்த வரை, காதல் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் இங்கு எடுக்கின்றனர். காரணம் கற்பனை செய்து காட்சிகளை அமைப்பது மிக மிக எளிது. இருப்பினும் ஒரு சில குறும்பட இயக்குனர்கள் வித்தியாசமான கதை கொண்ட குறும்படங்களையும் எடுக்கின்றனர். அந்த வகையில் குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள எனது அலுவலக நண்பன் "எழிலரசன்", முதன் முதலில் எடுத்த குறும்படம் இது.

படத்தின் கரு:

வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் மனநிலை, செல்வந்தர்களின் மனநிலையை விட எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் படம் இது.

இந்தப் படத்தில் நடித்துள்ள குப்பை பொறுக்கும் சிறுவன், நிஜத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறான். செல்வந்தர்கள் பெருமளவில் வசிக்கும் சென்னை-அடையாறின் தெருக்களில்தான் இந்தச் சிறுவன் தினமும் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நான் கூட பல முறை பார்த்திருக்கிறேன்.

படத்தில் எனக்கு பிடித்த காட்சி:

தன் மகனிடம், ஒரு பிச்சைக்கார சிறுவன்  விளையாடிக் கொண்டிருப்பதை கூட பொறுக்காத ஒரு செல்வந்தரின் பேக்கை திருடர்கள் திருடிக் கொண்டு போக எத்தனிக்கையில், அவர்களின் பைக்கின் குறுக்கே வந்து நின்று கொண்டு தடுக்கும் இந்தச் சிறுவனை திருடர்கள் இடித்து தள்ளி விட்டு ஓடுகின்றனர். அப்போது,  திருடப்பட்ட பேக்கில் இருந்த பல ருபாய் நோட்டுக்கள் நடு ரோட்டில் சிதறிக் கிடக்கின்றன. அந்தச் சிறுவன் அதனை எடுத்து, அந்த செல்வந்தரிடம் காட்டி விட்டு  உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை மெளனமாக எடுத்துரைத்து விட்டு, அடிபட்ட காலுடன், தன் வழியே நடந்து போகின்றான்.

படத்தின் ப்ளஸ்:

* படத்தின் கருவும், க்ளைமாக்ஸ் காட்சியும், அதன் பிண்ணணியில் வரும்  
   இசையும்.

*வசனங்களை குறைவாக அமைத்து இசையின் மூலம் காட்சியை நகர்த்தியது.

இப்படி ஒரு கருவை எடுத்து , அதனை காட்சிப்படுத்திய நண்பன் எழிலரசனுக்கு எனது பாராட்டுக்கள்.

படத்தின் மைனஸ்:

அபார்மெண்ட் சிறுவர்களின் ஆரம்பகாட்சிகள் முழுமை பெறாமல் எடுத்திருப்பது நன்றாகவே தெருகிறது. அப்புறம் அபார்மெண்ட் சிறுவர்கள் பேசிக்கொள்வது செயற்கையாக தெரிகிறது. இருப்பினும் முதல் குறும்படம் என்ற காரணத்தினால் , இது போன்ற குறைகளை விட்டு விடலாம். அடுத்த படத்தில் இது போன்ற குறைகள் இல்லாமல் இருத்தல் நலம்.

Video:



 ==================================================
 குறும்படம் 2 : லவ் புக்

சனமே இல்லாமல் சுமார் 20 நிமிடங்களில் ஒரு சுவாரசியமான குறும்படத்தை யாரேனும் தர முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கின்ற 
வகையில் அமைந்திருக்கிறது "லவ் புக்" என்ற இந்த குறும்படம். சிறந்த குறும்படமாகவும் அவார்ட் வாங்கியிருக்கிறது. அவார்ட் வாங்குவதற்கேற்ற 
குறும்படம்தான். இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ் மியூசிக் தான். ஒரு சில காட்சிகள் சாதாரணமாக அமைந்திருந்தாலும் மியூசிக்+ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல அவுட்புட்டை கொடுத்திருக்கிறது.  
Video:



======================================================

 குறும்படம் 2 : கண்ணாமூச்சி                                                                                            

டி துறையில் பணிபுரிபவர்கள், கோவா படத்தைப் பார்த்து விட்டு அதே சாயலில்,  எடுத்த முதல் குறும்படம் இது. படத்தில் வரும் ஹீரோ ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படி உள்ளது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. காதல்+காமெடி கலந்த படம் இது.  Hope you guys enjoy with it.

Video:




********************************************************

4 comments:

RAMA RAVI (RAMVI) said...

தங்கள் நண்பர் எழிலரசன் அவரிகளின் குறும்படம் சிறப்பாக இருக்கு.அவருக்கு வாழ்த்துக்கள்.

கண்ணாமூச்சி நல்ல வேடிக்கை.மிகவும் ரசித்தேன்.

சந்திர வம்சம் said...

குறும் படம் 2 :
வகுப்பறை காட்சிகள்மற்றும் மரங்கள் அடர்ந்த சாலை அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

குறும்படமும் உங்களின் விமர்சனமும் நல்லா இருக்கு சார் ! நன்றி !

N.H. Narasimma Prasad said...

மூன்று குறும்படங்களும் அருமை. குறிப்பாக, முதல் குறும்படம் சான்சே இல்ல. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...